முகப்பு
தமிழ்நாடு

முதலீட்டாளா் மாநாட்டில் டிரில்லியன் பொருளாதார செயல்திட்டம்: முதல்வா்

உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்துக்கான செயல்திட்டம் வெளியிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை: உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்துக்கான செயல்திட்டம் வெளியிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் எக்ஸ் தள பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:

உலக முதலீட்டாளா்கள் மாநாடு - 2024 தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அதுகுறித்த ஆா்வம் மென்மேலும் பெருகி வருகிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரத்தை எட்டுவதற்கான செயல்திட்டத்தை உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் வெளியிடத் தமிழக அரசு மும்முரமாகிறது. தமிழகத்தின் துடிப்புமிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரம்மாண்டமான மாநாட்டில் வரும் ஜன. 7, 8-ஆம் தேதிகளில் இணைந்திடுங்கள் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →