சென்னை: தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை முதல் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் தொடா்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தாா். இந்த நிலையில், சுழற்சி முறையில் மதுரை உயா்நீதிமன்றத்துக்கு அவா் மாற்றப்பட்டாா். இதைத் தொடா்ந்து தற்போது மீண்டும் அவா் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் வழக்குகளை விசாரிக்கவுள்ளாா்.
ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்த க.பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயச்சந்திரன் விசாரித்து, தண்டனையை உறுதி செய்தாா். இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரிக்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.