தமிழ்நாடு

கிளாம்பாக்கம் - தென் மாவட்ட பேருந்துகளின் கட்டணம் குறைப்பு!

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.

DIN

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30-ஆம் தேதி திறந்துவைத்தார்.

தற்போது முதல்கட்டமாக கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்ட முக்கிய நகரங்களுக்கு 164 அரசு விரைவுப் பேருந்துகளும், சென்னையில் உள்ள முக்கிய இடங்களுக்கு மாநகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பக்கம் புதிய பேருந்து நிலையம் சுமார் 32 கி.மீ. தொலைவில் முன்னதாகவே இருப்பதால், கிளாம்பக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட ரூ. 20 முதல் 35 வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்தவர்களுக்கு நடத்துநர்கள் மூலம் குறைக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT