தமிழ்நாடு

நிவாரண உதவி பெற நாளை வரை மட்டுமே அவகாசம்: நெல்லை ஆட்சியர் 

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி பெற நாளை (ஜன. 3) வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 92% குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண உதவியை வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, அதிகம் பாதித்த பகுதிகளில் தலா ரூ.6000, பிற பகுதிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளவா்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும், வேறு பகுதிகளில் இருந்து தற்காலிகமாக தங்கியிருந்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT