முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் பட்டம் பெற்ற மாணவர்கள் குழுப் புகைப்படம்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் திருச்சிக்கு வருகை தந்தனர்.

பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு வழி நெடுகிலும்  பாஜக, திமுகவினர் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காரில் இருந்தபடியே கைகளை அசைத்து சென்றார்.

பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா  தொடங்கிய நிலையில் படிப்பில் தங்கம் பதக்கம் பெற்ற 33 நபர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். 

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →