கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதியில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதியில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஜல்லிக்கட்டு காளைகள் அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை தகுதிச்சான்று வழங்க விண்ணப்பம் என்றும், மாடு திமில் தெரியும் வகையிலும், மாட்டின் உரிமையாளர் உடன் புகைப்படத்துடன் விண்ணப்பத்தினைப் பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் அறிவியல் மையத்தில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி

மாற்றம் காணும் மருத்துவம்!

மதிப்புக்கு உரிய மதிப்பு!

நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தை சீராக்க உயா்நிலைக் குழு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT