கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் தேதிகள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் தேதிகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

அதன்படி, அவனியாபுரத்தில் ஜன. 15 ஆம் தேதியும், பாலமேட்டில் ஜன. 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜன. 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடக்கும் அந்தந்த இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 6 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

SCROLL FOR NEXT