தமிழ்நாடு

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரயில்வேவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 20 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரயில்வேவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 20 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையத்திலிருந்து முதல்கட்டமாக ஆம்னி பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளது. பொங்கலுக்கு பிறகு முழு அளவிலான பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு தரப்பில் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரயில்வே நிதி கிடைத்து ரயில் நிலையம் அமைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியிலிருந்து முதல்கட்டமாக தெற்கு ரயில்வேவுக்கு ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை முடிக்க தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT