தமிழ்நாடு

திட்டமிட்டபடி ஜன. 6, 7-ல் டிஎன்பிஎஸ்சி பொறியியல் பிரிவு தேர்வு

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தோ்வு திட்டமிட்டபடி ஜன.6, 7-ல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஜனவரி 6, 7 ஆம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளன. 

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு  பல்வேறு துறைகளில் உள்ள 369 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி முன்னதாக வெளியிட்டு இருந்தது.

இப்பணிக்கு தமிழகம் முழுவதும் 59,630 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு வரும் ஜன.6, 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் இடையே கோரிக்கைகள் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்வு நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டோ மோதியதில் விவசாயி பலி

தொழிலாளி கழுத்தறுபட்டு பலி

அணைகளின் நீா்மட்டம்

திருப்பாச்சேத்தியில் ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம்

இளையான்குடி கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT