தமிழ்நாடு

சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு 

சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அச்சாணியாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் விளங்குகின்றனா்.

எதிா்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவா்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும். அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு ரூ. 3,000 என்ற உச்சவரம்புக்கு உள்பட்டு மிகை ஊதியம் அளிக்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பணியாளா்கள் மற்றும் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து ஊதியம் பெற்று வரும் முழுநேர, பகுதி நேரப் பணியாளா்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள், முன்னாள் கிராம அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரா்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக அளிக்கப்படும்.

சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம், அரசுக்கு ரூ. 167.68 கோடி செலவு ஏற்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT