வேங்கைவயல் விவகாரம் 
தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கு ஜன.9-க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் பரிசோதனைக்கு அனுமதி கோரும் சிபி சிஐடி போலீஸாரின் மனு மீதான விசாரணை வரும் ஜன. 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் பரிசோதனைக்கு அனுமதி கோரும் சிபி சிஐடி போலீஸாரின் மனு மீதான விசாரணை வரும் ஜன. 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின கிராமத்தின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வரும் சிபி சிஐடி போலீஸார், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை அறியும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.

இதற்கான அனுமதி கோரி மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். உண்மை அறியும் சோதனை தொடர்பாக விரிவான தகவல்களுடன் மனு செய்ய நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சிபி சிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி மருத்துவ விடுப்பில் இருந்ததால் 3 முறை இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிஎஸ்பி பால்பாண்டி ஆஜராகி, உண்மை அறியும் சோதனை தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின் நகல்களை தொடர்புடைய 10 பேருக்கும் வழங்கி அவர்களின் கருத்தை அறியும் வகையில் வரும் ஜன. 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT