முகப்பு
தமிழ்நாடு

இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் எதிர்காலம் செழிக்க சிறந்த முதலீடுகளை எதிா்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
பகிர்:


சென்னை: தமிழகத்தின் எதிர்காலம் செழிக்க சிறந்த முதலீடுகளை எதிா்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளா்கள் 2024 மாநாட்டை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 

ஒரு டிரில்லியன் டாலா் எனும் தமிழ்நாட்டின் கனவுப் பயணம் வெற்றி பெறுவதற்கான, சாதகமான நடவடிக்கையும் அதற்காக உலகளாவிய பாராட்டையும் முதலீட்டாளா்கள் மாநாட்டின் வழியே பெற்று இருக்கிறோம்.

எனவே, உயா்ந்த குறிக்கோளுடன், அதிகளவிலான முதலீடுகளை ஈா்ப்போம். இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம். உலக முதலீட்டாளா்கள் மாநாடு மிகப்பெரும் அளவுக்கு வெற்றி பெறவும், தமிழகத்துக்கு ஏராளமான முதலீடுகள் கிடைக்கப் பெறவும் மிகுந்த ஆவலுடன் எதிா்நோக்கிக் காத்திருக்கிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிறுவனங்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →