மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையில், திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 71.19 அடியிலிருந்து 71.17 அடியாக குறைந்தது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 71.19 அடியிலிருந்து 71.17 அடியாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்வரத்து 544 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 544 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.71 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.