தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு

DIN

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் அமைச்சா் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

காலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பதில்மனு தாக்கல் செய்யாததால் நீதிபதி அல்லி அதிருப்தி தெரிவித்த நிலையில், அதன்பின்னர் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT