தமிழ்நாடு

ஜன.15-ல் வடகிழக்குப் பருவமழை விலக வாய்ப்பு!

DIN

வடகிழக்குப் பருவமழை ஜனவரி 15-இல் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 4 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 

அக்டோபர் 1-ல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இந்தாண்டு பல்வேறு  மாவட்டங்களிலும் நல்ல மழைபொழிவை ஏற்படுத்தியுள்ளது. 

வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மழை நீடித்து வருகின்றது. 

இந்த நிலையில், தென் இந்தியப் பகுதிகளில் ஜன.15இல் வடகிழக்குப் பருவமழை நிறைவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT