தமிழ்நாடு

உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின் 

DIN

மத்திய குழுக்கள் பார்வையிட்டு சென்ற நிலையில் உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு அடுத்தடுத்து சந்தித்த இருவேறு பேரிடர்களிலிருந்து மீள்வதற்குத் தேவையான நிதியை வழங்க வலியுறுத்தி, நமது அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மத்தியக் குழுக்களும் வந்து பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், நமது கருத்துகளை உள்வாங்கி உரிய நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு தில்லியில் இன்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து

கோட்டையூா் பாரி நகரில் சித்திரை திருவிழா

அய்யனாா் கோயிலில் சித்திரைத் திருவிழா

விளத்தூா் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT