கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரி நியமனம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN


சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமனம் செய்யப்படுவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் செயல்பாடு, பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலர் இன்று நியிமக்கப்பட்டுள்ளார். இவர் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்பார் என்று கூறப்படுகிறது.

இந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலருந்து திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்

SCROLL FOR NEXT