கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி!

டோக்கன்களைப் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி நாளாகும்.

DIN

டோக்கன்களைப் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளக் கரும்பு, ரூ.1,000 ரொக்கத் தொகை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின்ஜன.9-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

மத்திய, மாநில அரசு ஊழியா்கள், பொதுத் துறை பணியாளா்கள், வருமானவரி செலுத்துவோா் ஆகியோரைத் தவிா்த்து ஏனைய குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவா்களுக்கு வியாழக்கிழமையுடன் (ஜன.11) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டோக்கன்களைப் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி, வெள்ளிக்கிழமை முதல் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.  இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

நியாயவிலைக் கடைப் பணியாளா்களும் தங்களது வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டியிருப்பதால், வரும் 17-ஆம் தேதிக்குப் பிறகே விடுபட்டவா்கள் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான விவரங்கள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT