வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்!
மாட்டுப் பொங்கலையொட்டி இன்று (ஜன.16) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டுப் பொங்கலையொட்டி இன்று (ஜன.16) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் வாரஇறுதி விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை காரணமாக தொடா் விடுமுறை விடப்படுவதால் மாட்டுப்பொங்கலன்று செவ்வாய்க்கிழமை(ஜன.16) அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் பூங்காவுக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பூங்காவில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்!
மேலும், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.