ஆவரங்காடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 6 பேர் காயம் 
தமிழ்நாடு

மணப்பாறை: ஆவரங்காடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 6 பேர் காயம்!

மணப்பாறை அடுத்த ஆவரங்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் 3 வயதுக் குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

DIN

மணப்பாறை அடுத்த ஆவரங்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் 3 வயதுக் குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவரங்காடு பொன்னர் - சங்கர் ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 350 காளையர்களும் களம் கண்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியர் க.தட்சணாமூர்த்தி கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்துள்ளார்.

முதலில் நான்கு கிராமங்களின் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. காளைகளை அடக்க 25, 25 தொகுப்பாக 350 காளையர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். 

வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த சில காளைகள் காளையர்களைக் கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டுக் கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து அடக்கினர். காளைகளைப் பிடித்த வீரர்களுக்கு வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் தென்னங்கன்றுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை வீரர்கள், பார்வையாளர், மாட்டு உரிமையாளர் என 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மாடு முட்டியதில் தாயின் அரவணைப்பிலிருந்த 3  வயதுக் குழந்தை பொன்னழகு தலையில் காயமடைந்தான். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெவ்வெறு சம்பவங்கள்: சிறுமி உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

நன்றென்றதெல்லாம் தீதென்பாா்!

சமூக வலைதள விமா்சனங்களை பொருள்படுத்த வேண்டியதில்லை: நீதிபதி

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 396 மனுக்கள்

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த முயற்சி: கிராம மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT