கோப்புப்படம் 
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: திமுக சார்பில் குழுக்கள் அமைப்பு!

மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு திமுக தலைமைக் கழகம் 3 குழுக்களை அமைத்துள்ளது.

DIN

மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு திமுக தலைமைக் கழகம் 3 குழுக்களை அமைத்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி உள்ளிட்டோர் அடங்கிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில்  டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியாவிற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு,  உதயநிதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


திமுக சார்பில் தொகுதி பங்கீடு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கே.என். நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்  பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த குழுக்களில் துரைமுருகன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT