தமிழ்நாடு

நீட், ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

DIN

நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வும், மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வும்  நடத்தப்படுகிறது. 

நுழைவுத்தேர்வுகளை கையாள மாணவர்கள் சிறு வயதிலிருந்தே பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மனஅழுத்தமும், தற்கொலை எண்ணமும் அதிகரிக்கின்றன. 

இதனைத் தடுக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், 

16 வயதிற்கு உள்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை. 

மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக்கூடாது. 

பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதி பெற்றவர்கள் பயிற்சி மையங்களில் ஈடுபடுத்தக் கூடாது. 

குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யத் தடை விதித்துள்ளது. 

விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 

விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் (விடியோ)

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

இந்தோனேசியாவில் தோண்டத் தோண்ட கிடைக்கும் உடல்கள்..!

SCROLL FOR NEXT