தமிழ்நாடு

தமிழகத்தில் மூடப்படும் ஒரு ரயில் நிலையம்: ரயில்வே அறிவிப்பு

DIN

தமிழகத்தில், பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால், ஒரு ரயில் நிலையமே மூடப்படவிருக்கிறது.

தமிழகத்தின், கரூர் - சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம்தான் மூடப்படவிருக்கும் அந்த ரயில் நிலையம். இது நாளை முதல் அதாவது ஜனவரி 25ஆம் தேதி மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதாவது, மோனூர் - கரூர் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும் இன்று மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டும் வழங்கப்படாது, வேறு எங்கிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை!

திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை‌!

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்தா?

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!

SCROLL FOR NEXT