தமிழ்நாடு

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் விட்டதை கீழக்கரையில் பிடித்த வீரர் அபிசித்தர்!

மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார்.

DIN

மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார்.

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் இன்று (ஜன. 24) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

கீழக்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மாலை நிறைவடைந்த நிலையில், அபிசித்தர் என்ற இளைஞர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.

அவருக்கு ரூ.1 லட்சம் பணத்துடன், மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட்டது. வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்தப் பரிசினை வழங்கினார்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட அபிசித்தர் இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்தார். 

கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் தலா 6 காளைகளை அடக்கிய தமிழரசன், பரத் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT