தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: ஜன. 28-ல் பேச்சுவார்த்தை

DIN

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுள்ளன. மநீம உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும் இடம்பெறும் எனவும் எதிர்பாா்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக திமுக, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT