தமிழ்நாடு

கோவை: திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN


கோவை: கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர்(65) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற பையா கிருஷ்ணன்(65). இவர் கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளரான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனாலும் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்தார்.இதனால் இவருக்கு திமுக தனி மரியாதை கொடுத்து வந்தது. 

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை பையா கவுண்டர் தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தனது தொகுதி மட்டுமல்லாது கோவையின் பல்வேறு பகுதி மக்களுக்கும் உதவிகளை செய்துவந்த பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT