வெடி விபத்தில் தரைமட்டமான மோட்டார் அறை 
தமிழ்நாடு

சாத்தூர் அருகே பட்டாசு வெடிவிபத்து: இளைஞர் பலி

சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

DIN


சாத்தூர்: சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள மோட்டார் அறை தரைமட்டமாகி கிடந்துள்ளது. 

இதயைடுத்து அந்த பகுதியாக சென்றவர்கள் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் தாலுகா போலீசார் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட போது மோட்டார் அறையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதும், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மோட்டார் அறை கட்டடம் தரைமட்டமானது. மேலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட மீனம்பட்டியைச் சேர்ந்த அஜீத்(23) என்பவர் உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT