இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரங்க.ராமலிங்கம் உள்பட 9 தமிழறிஞா்கள் விருதுகளைப் பெறவுள்ளனா்.
தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: 2022-ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது. மரபு, ஆய்வு, படைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் முறையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் அரங்க.ராமலிங்கம், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த கொ.மா.கோதண்டம், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த சூா்யகாந்தன் ஆகியோருக்கு இலக்கியமாமணி விருது அளிக்கப்படுகிறது.
இதேபோல, 2023-ஆம் ஆண்டுக்கான விருது, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஞா.மாணிக்கவாசகன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பேராசிரியா் சு.சண்முகசுந்தரம், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கவிஞா் இலக்கியா நடராஜன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
கூடுதலாக 3 பேருக்கு விருது: முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு நோ்வாக மேலும் மூன்று பேருக்கு இலக்கியமாமணி விருது அளிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மணி அா்ஜுனன், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அர.திருவிடம், சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த க.பூரணச்சந்திரன் ஆகியோா் இலக்கியமாமணி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியன வழங்கப்படும். விருது வழங்கும் நாள், நேரம் பின்னா் அறிவிக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.