நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் - கும்பகோணம் பேருந்து வழித்தடத்தில், பாடகச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் 15 ஆம் ஆண்டு தைப்பூச பௌர்ணமி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் திருமடத்தில் அன்னதானக் கொடியேற்று வைபவம், அதனைத் தொடர்ந்து அருட்பா பக்தி இசை நிகழ்ச்சியும், வள்ளல் பெருமானுக்கு மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாபேட்டை புலவர் பன்னீர்செல்வம் விழாவினை தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: ரத்தப் புற்றுநோய் பாதித்த சிறுவனைக் கொன்ற மூட நம்பிக்கை
இதற்கான ஏற்பாடுகளை பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் கிராம அன்னதான அறக்கட்டளை மற்றும் பாடகச்சேரி கிராம வாசிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.