கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொப்பூர் இரட்டைப்பாலத்தில்  சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

DIN

தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்  முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் புதன்கிழமை(ஜன.24) மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23), ஜெனிபர்(29)ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இந்த விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கிடவும்  அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

ரூ.150 கோடி வசூலித்த சர்வம் மாயா..! ஓடிடியில் வெளியீடு!

வாரணாசி வெளியீட்டுத் தேதியை உறுதி செய்தார் ராஜமௌலி!

சுற்றுலா என்றாலே வியட்நாம், சிங்கப்பூர் என்றில்லை: சுற்றுலா பதிவர் கார்த்திக் முரளி!

SCROLL FOR NEXT