தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்!

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு தேசிய கொடியை ஏற்றிவைத்து பயனாளிகளுக்கு ரூ.59.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, தேசிய கொடியை ஏற்றி, காவல்துறையின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

தொடர்ந்து சுதந்திரத்தி போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கௌரவித்தார். 

மேலும், 27 பயனாளிகளுக்கு ரூ.59.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த 171 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.  

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை,மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.6  பள்ளிகளைச் சேர்ந்த 805 மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

உக்ரைன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்!

’எனக்குப் பின் யார்..?’ -பிரதமர் மோடி யாரைச் சுட்டிக்காட்டுகிறார்?

அன்பே, நீ கலைகளின் தொகுப்பு... சாக்க்ஷி மாலிக்!

கடலோரக் கவிதை!

SCROLL FOR NEXT