லோயர்கேம்ப்பில்.. 
தமிழ்நாடு

லோயர்கேம்ப்பில் பாடகி பவதாரணி உடல்: இளையராஜா வருகை

தேனி மாவட்டம் கம்பம் அருகே லோயர்கேம்ப்பில் இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி உடல் கொண்டுவரப்பட்டுள்ளது.

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே லோயர்கேம்ப்பில் பவதாரணி உடல்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இசையமைப்பாளர் இளையராஜா வந்துள்ளார்.

பவதாரணிக்கு மக்களும், திரையுலகப் பிரமுகர்களும், உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தேனிமாவட்டம் கம்பம் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாறு கரையில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி உடல் அடக்கம் நடைபெற உள்ளது.

முன்னதாக சனிக்கிழமை அங்குள்ள ஸ்ரீ குருகிருபா வேதபாடசாலையில் சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பவதாரணி உடல் கொண்டுவரப்பட்டு வேதபாடசாலை அரங்கில் வைக்கப்பட்டது.

உடலுக்கு சுமார் 2 மணியளவில் இளையராஜா வந்து மகளது உடலைப் பார்த்து கண்கலங்கினார். அவரை தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தி கண்கலங்கினார். பிறகு இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, டிரம்ஸ் மணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கு
இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு இளையராஜா மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். இறுதி சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

பின்னா், பவதாரணியின் உடல் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT