தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு: பிப்.3-ல் திமுகவுடன் இந்திய கம்யூ. பேச்சுவார்த்தை

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. 

DIN

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. 

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. 

இந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்ததாக திமுகவும், திருப்தியாக இருந்ததாக காங்கிரஸும் தெரிவித்தன. அதேவேளையில் காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் தமிழகம், புதுச்சேரியை சோ்த்து 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காங்கிரஸைத் தொடர்ந்து திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை பிப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாநில துணைச் செயலர் மு.வீரபாண்டியன் பேச்சுவார்ததையில் பங்கேற்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT