ஆளுநர் ஆா்.என்.ரவி 
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து!

ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டை: ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆளுநர் ஆர்.என். ரவியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடியில் இருந்து புறப்படும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும், மாலையில் திருச்சி விமான நிலையம் செல்வதற்கு தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காக பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகக் காரணங்களுக்காக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் ஆளுநரின் வருகையை எதிர்த்து கறுப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை, ரூ.50,000 திருட்டு

தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு குடை

கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT