கோப்புப்படம் 
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்: நடைமேடை விவரம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளின் நடைமேடை எண்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

DIN

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளின் நடைமேடை எண்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட அனைத்து தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

இதனால் பயணிகள் பல அசௌகரியங்களை சந்தித்தனா். குறிப்பாக, வடசென்னைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மூலம் பயணத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து முனையத்திலிருந்தும் இயக்கப்படும் என அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தார்.

கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி வழித்தடங்களிலும், கடலூா், புதுச்சேரிக்கு , திண்டிவனம் வழியாகவும், திருவண்ணாமலை மற்றும் போளூா், வந்தவாசி உள்ளிட்ட வழித்தடங்களிலும் ஆக மொத்தம் 710 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சா் சிவசங்கா் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நடைமேடை 1 மற்றும் 2-ல் இருந்து பேருந்துகள் இயங்கும்.

சிவகங்கை, சாயல்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் 3-ஆம் நடைமேடையிலிருந்தும், கும்பகோணம், தஞ்சாவூர்  ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் 4-ஆம் நடைமேடையிலிருந்தும் புறப்படும்.

மேலும் கோவை, சேலம் செல்லும் பேருந்துகள் 6-வது நடைமேடையிலும், செஞ்சி, செங்கம் 7-வது நடைமேடையில் இருந்து புறப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

எஸ்.இ.டி.சி பேருந்துகள் நடைமேடை 1 - 7 வரை நிறுத்தும் வகையிலும், டி.என்.எஸ்.டி.சி பேருந்துகள் நடைமேடை 7 - 10 நிறுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT