தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடுதமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் 6 நாள்கள் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இம் மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் புதன் முதல் திங்கள்கிழமை (ஜூலை 3-8) வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:
புதன் முதல் சனிக்கிழமை(ஜூலை 3-6) வரைமன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதியில் சூறாவளிக்காற்று இடையிடையே 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.