உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன் 
தமிழ்நாடு

பிரிட்டன் தேர்தலில் போட்டியிடும் 8 தமிழர்கள்!

முதல்முறையாக பிரிட்டன் தேர்தலில் அதிக தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிரிட்டனில் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் போட்டியிடுகின்றனர்.

பிரிட்டனின் புதிய அரசைத் தீர்மானிக்கக் கூடிய இந்தத் தேர்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையில்(ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) உள்ள 650 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இரு கட்சிகள் சார்பிலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட முன்பைவிட அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து பிரிட்டனில் குடியேறிவர்களுக்கும், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன்ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

நரணி குத்ரா ராஜன், டெவினா பால், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன்

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆளும் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

ஒளிவீசும் நிலம்... லைலா!

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

SCROLL FOR NEXT