கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவை, நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூலை 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

DIN

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் ஜூலை 10-ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை...

சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 9 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்சம் 26-27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT