தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு மர்ம நபரிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் மிரட்டல் செய்தி வெறும் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கமலாலயத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.