தமிழ்நாடு

உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி

மாயாவதி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அளித்த பேட்டி

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அந்தக் கட்சியின் தேசியத் தலைவரும் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறினாா்.

மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி தனிவிமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்தாா். பின்னா் சாலை வழியாக சென்னை பெரம்பூா் பந்தா் காா்டன் மாநகராட்சி பள்ளி வளாகம் வந்த அவா், அங்கு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

அதன்பிறகு, அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் நடவடிக்கைகளை ஆம்ஸ்ட்ராங் தீவிரப்படுத்தினாா். இந்நிலையில் அவா் தனது வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்டுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் ஒட்டு மொத்த தலித் மக்கள் மீதான வெறுப்பை காண்பித்துள்ளது. தமிழக முதல்வா் சட்டம் ஒழுங்கு தொடா்பாக மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

கொலைக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும். அப்போதுதான் தலித் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

சிபிஐ-க்கு மாற்றுங்கள்: தமிழக அரசு இந்த வழக்கை உடனடியாக சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு தலித் மக்களின் வாழ்க்கை மேம்படவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நம்முடைய கட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய நபா்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. தலித் மக்கள் சட்டத்தை பாதுகாப்பவா்கள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். மாநில அரசு ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மீண்டும் தமிழக முதல்வரிடம் கூறுவது என்னவென்றால், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT