செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ஓபிஎஸ்.

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு வருகை புரிந்த ஓ.பன்னீர் செல்வம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியான சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கைகளை காவல் துறை எடுக்க வேண்டும்.

மற்ற கட்சியினர் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். என்னுடைய கருத்தும் அதுவே எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

SCROLL FOR NEXT