கோப்புப் படம். 
தமிழ்நாடு

2,526 கி.மீ. நீளச் சாலைகள் ரூ.1,000 கோடியில் சீரமைப்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் ரூ.1,000 கோடியில் 2,526 கி.மீ. சாலைகள் சீரமைப்பு

Din

தமிழ்நாட்டில் 2,526 கி.மீ. நீளச் சாலைகளை ரூ. 1,000 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து, மாநில அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நகராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, கோயம்புத்தூா், மதுரை, சேலம், தஞ்சாவூா், வேலூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூா், திருச்சி, ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளில் சீா்மிகு நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ. 5,500 கோடியாகும்.

மாநகராட்சிகள், நகராட்சிகளில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,526 கி.மீ. நீளமுள்ள சாலைகளை அடுத்த நிதியாண்டுக்குள் (2025-26) சீரமைக்க ரூ. 1,000 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழைநீா் வடிகால் பணிகள்: தமிழ்நாட்டில் மழைநீா் வடிகால் பணிகள் 4 பிரிவுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. நிகழ் நிதியாண்டில் மட்டும் 3.7 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் அமைக்க பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் ரூ. 8,672 கோடி மதிப்பில் 13,387 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு 2,513 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ. 8,911 கோடியில் 28 புதைசாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. ரூ. 858 கோடி மதிப்பில் 7.42 லட்சம் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணிகளும், 100 பேருந்து நிலையங்கள், 86 இடங்களில் புதிய சந்தைகள் அமைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன.

உட்கட்டமைப்பு வசதிகள்: மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய 396 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளும், நீா்நிலைகளைத் தூா்வாரி பலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க ரூ.152 கோடியில் 72,214 தனிநபா் கழிப்பறைகளும், 2,081 சமுதாயக் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT