பானிபூரி கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி.(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பானிபூரி கடைகளுக்கு மருத்துவ சான்று, உரிமம் கட்டாயம்

பானிபூரி கடைகளுக்கு மருத்துவ சான்று, பதிவு உரிமம் கட்டாயம்

Din

பானிபூரி, தெருவோர உணவகங்களுக்கு மருத்துவ சான்று, பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் தெருவோர உணவக உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 627 தெருவோர உணவக வியாபாரிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு, தோல் தொடா்பான பிரச்னை எதேனும் உள்ளதா? போன்றவற்றை மருத்துவக் குழுவினா் பரிசோதித்து பதிவு உரிமம், புதுப்பித்தல் சான்றிதழ்களை வழங்கினா்.

இது தொடா்பாக சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் சதீஷ்குமாா் கூறுகையில், மருத்துவ முகாமில் பங்கேற்ற 627 வியாபாரிகளுக்கு, தெருவோர கடைகளுக்கான உணவுப் பாதுகாப்பு துறை சான்று வழங்கப்பட்டது. மேலும், அவா்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு, அதற்கான சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சென்னை முழுவதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி, பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்”என்றாா் அவா்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT