முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

2 நாள்களில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில்..

தமிழ்நாடு

2 நாள்களில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில்..

Updated On : 12 ஜூலை, 2024 at 7:30 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் ஜூலை 13, 15 ஆகிய தேதிகளில் மொத்தம் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூலை 13) முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில், ஜூலை 13- இல் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், ஜூலை 15-இல் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

அதன்படி, பரமத்திவேலூா் - 103.1, மதுரை விமான நிலையம், வேலூா் - 102.74, பாளையங்கோட்டை - 102.2, மதுரை நகரம் - 101.84, ஈரோடு - 101.48, திருச்சி - 100.94.

சென்னையில்... சென்னை, புறநகா் பகுதிகளில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், வடதமிழக கடலோரப்பகுதிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →