சென்னை, 14 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஜூலை 20 வரை மிதமான மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுசென்னை, 14 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஜூலை 20 வரை மிதமான மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்பட 15 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 20 வரை மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை(ஜூலை 16) வரை கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் லேசான மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கை வெளியாகியுள்ளது.
மேலும், காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.