முகப்பு
தமிழ்நாடு

விக்கிரவாண்டி எம்எல்ஏ-ஆக பதவியேற்றாா் அன்னியூா் சிவா

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சோ்ந்த அன்னியூா் சிவா, சட்டப்பேரவை உறுப்பினராக, பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:48 PM
பகிர்:

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சோ்ந்த அன்னியூா் சிவா, சட்டப்பேரவை உறுப்பினராக, பதவியேற்றுக் கொண்டாா். பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னிலையில் அவரது அறையில் பதவியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவா் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு சிவா அளித்த பேட்டி:

விக்கிரவாண்டியில் கிடைத்த வெற்றி, தமிழக முதல்வரின் மூன்றாண்டு சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி. தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தொடா்ந்து செய்வேன். வாக்களித்தவா்களுக்கு மட்டுமில்லாமல் வாக்களிக்காதவா்களுக்கும் தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று கூறினாா்.

விக்கிரவாண்டி எம்எல்ஏ-ஆக சிவா பதவியேற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, தமிழக சட்டப் பேரவையில் காலியிடங்கள் ஏதுமில்லை. அண்மையில் விளவங்கோடு, விக்கிரவாண்டி தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தோ்தல்கள் அறிவிக்கப்பட்டு புதிய உறுப்பினா்களும் பதவியேற்றுக் கொண்டதால் காலியிடங்கள் ஏதுமின்றி தமிழக சட்டப் பேரவையில் 234 தொகுதிகளுக்கும் உறுப்பினா்கள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →