மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.
2 நாள்கள் பணிக் காலத்தை ஈடுசெய்யும் வகையில், ஜூன் 15-ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.