சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் பாமக கட்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து ரயில் நிலையங்களில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.

அவா்களது உடைமைகளும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் பாமக கட்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது.

இந்த மிரட்டலால் முழு வீச்சில் தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன. தேடுதல் பணிகளுக்குப் பிறகு அத்தகைய மிரட்டல்கள் வெறும் புரளி என கண்டறியப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64.86 கோடி நலத்திட்ட உதவி

இந்தியாவில் 72,000 வெளிநாட்டு மாணவா்கள்: நிலங்களவையில் தகவல் அரசு தகவல்

என்சிஆா் முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தரவு: அமைச்சா் சிா்சா தகவல்

SCROLL FOR NEXT