கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை: சென்னையில் நினைவேந்தல் பேரணி

இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு

DIN

சென்னையில் பகுஜன்சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குன்றத்தூா் திருவேங்கடம், பொன்னை பாலு உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் திருவேங்கடம் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருவள்ளூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ள பெண் ரெளடி அஞ்சலை, சனிக்கிழமை(ஜூலை 20) மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் சனிக்கிழமை(ஜூலை 20) கைது செய்ப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னை எழும்பூரில் இன்று(ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடந்தது. அதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தலித் கூட்டமைப்பிரிவினர், சமூக செயல்பாட்டாளர்கள், மேலும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பிலிருந்தும் சுமார் 500 பேர் ரமணா ஹோட்டல் அருகிலிருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக நடந்து சென்றனர். இதையொட்டி, பாதுகாப்பு கருதி ஏராளமான காவலர்கள் பேரணி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாதென அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, விசிக உறுப்பினர்கள் யாரும் இன்றைய பேரணியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

SCROLL FOR NEXT