ஆனந்தன், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 
தமிழ்நாடு

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடி, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம்.

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தனை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், புதிய தலைவரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மேலும், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடி, துணைத் தலைவராக இளமான் சேகர், பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சித் தலைமை வெளியிட்ட செய்தி

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ஆனந்தன் போட்டியிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங் தொடர்பான வழக்குகளில் வாதிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழம்பெருமைமிகு இந்தியா... மொழி மற்றும் கலைகளின் சிறப்பு! | Ancient India

“திமுக-விடம் சிக்கிக்கொண்டிருக்கிறார் திருமா” செல்லூர் ராஜு பேட்டி | ADMK | VCK

கையில் நெட்டை எடுப்பது உடலுக்கு கெடுதலா? Health Tips from Dr. Kannan

இந்த வாரம் கலாரசிகன் - 17-08-2025

கம்பனின் தமிழமுதம் - 58: முடியாது என்று சொல்லுங்கள்...

SCROLL FOR NEXT